கமல்ஹாசனின் உடல்நிலை தொடர்பில் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை

Wednesday, 24 November 2021 - 15:52

%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
நடிகர் கமல்ஹாசனுக்கு கொவிட் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தற்போது அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக அவருக்கு இருமல், சளி இருந்ததால் சென்னை, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொவிட் தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து, மருத்துவமனையில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் கமல்ஹாசனை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது -மருத்துவமனை அறிக்கை..!