பிரான்ஸில் கொவிட் நடவடிக்கைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் அதிகாரிகள் மீது துப்பாக்கி பிரயோகம்

Wednesday, 24 November 2021 - 19:14

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
பிரான்ஸின் கரீபியன் தீவான மர்டினியுக்கில் கொவிட் நடவடிக்கைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் அதிகாரிகள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சுகாதார பணியாளர்கள் மற்றும் சிவில் சேவையாளர்களுக்கு கட்டாய தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு எதிராக அங்கு இரண்டாம் நாளாகவும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து சுகாதார பணியாளர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பினையும் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வீதிகளில் தடைகளை ஏற்படுத்தி வாகனங்களை தீயிட்டுள்ளதாகவும், பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளோரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றது.

இதனால் அங்கு பதற்ற நிலை காணப்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.