மாநாடு திரைப்படம் திட்டமிட்டப்படி நாளை வெளியாகும்

Wednesday, 24 November 2021 - 22:10

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் மாநாடு திரைப்படம் திட்டமிட்டப்படி நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள், பின்னணி வேலைகள் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகி இருந்தது.

இந்நிலையில், மாநாடு திரைப்படம் நாளை வெளியாகாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இன்று அறிவித்தார்.

எனினும், தற்போது படத்தின் பிரச்சினைகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், படம் திட்டமிட்டப்படி நாளை வெளியிடப்படும் எனவும் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டு பின்னர் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No description available.