நேற்று 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

Thursday, 25 November 2021 - 13:11

%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+17+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81
நாட்டில் நேற்றைய நாளில், 20,884 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகத் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் 17,798 பேருக்கு பைஸர் மூன்றாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, பைஸர் மூன்றாம் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 398,013 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், 636 பேருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசியும், 426 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

அதேநேரம், 494 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 1,529 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாகத் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.