இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் கவலையளிக்கிறது - பிரித்தானியா

Thursday, 25 November 2021 - 13:19

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் கவலைதரும் வகையில் இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்திக்கான அலுவலகம், 2021 ஆம் ஆண்டுக்கான உலக மனித உரிமை நிலைமை சம்பந்தமாக வெளியிட்டுள்ள அறிக்கையில்  இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில், இலங்கையின் மனித உரிமை விவகாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கையில் இலங்கையின் நிகழ்கால மற்றும் எதிர்கால மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இந்த அறிக்கையின் பிரகாரம் இலங்கையின் தற்போதைய சூழ்நிலை எதிர்காலத்திலும் தொடரும் அபாயமுள்ளதாக எதிர்வு கூறப்பட்டிருந்தமை, சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் மோசமாக இருப்பதாக பிரித்தானியாவின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்திக்கான அலுவலகம் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.