எத்தியோப்பியாவில் இடம்பெற்று வரும் போர் நிறுத்தப்பட வேண்டும் - அன்டோனியோ குட்டேரஸ்

Thursday, 25 November 2021 - 13:19

%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D
எத்தியோப்பியாவில் இடம்பெற்று வரும் உள்நாட்டு போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் (Antonio Guterres) கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு முதல் எத்தியோப்பியாவின் அரச படையினருக்கும், திக்ரே மக்கள் விடுதலை முன்னணி அமைப்பினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்று வருகின்றது.

கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்தும் முன்னேறி வருவதன் காரணமாக பெரும்பாலான பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவ தீர்வின்றி இராஜாந்திர முறையில் தீர்வு எட்டப்பட வேண்டும்.

அதற்கு இருதரப்பினரும் உடன்பட்டு உடனடியாக உள்நாட்டில் இடம்பெற்று வரும் மோதல்களை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் கோரியுள்ளார்.