முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி

Thursday, 25 November 2021 - 13:56

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற சோபர்ஸ் - திசேரா கிண்ணத்துக்கான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.

இதில் மேற்கிந்திய தீவுகள் அணியை 187 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை தோற்கடித்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, இலங்கை அணி, தமது முதல் இன்னிங்ஸில், சகல விக்கெட்டுக்களையும் இழந்து 386 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக திமுத் கருணாரத்ன 147 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இதனையடுத்து, தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 230 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக கைல் மேயர்ஸ் 45 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இதற்கமைய, மேற்கிந்தியத் தீவுகள் அணி, இலங்கை அணியை விடவும் 156 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்தது.

தொடர்ந்து தனது இரண்டாம் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களை பெற்றுக்ெகாண்டது.

அணிசார்பில் அதிகபடியாக திமுத் கருணாரத்ன 83 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இதனையடுத்து, போட்டியின் 5ஆம் நாளான இன்று தமது இரண்டாம் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

அணிசார்பில் அதிகபடியாக என்க்ருமா பொன்னர் 68 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.