பிக்பொஸ் வீட்டுக்குள் சின்னத்திரை பிரபலம்

Thursday, 25 November 2021 - 16:03

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
தமிழ் பிக்பொஸ் நிகழ்ச்சியின் 5ஆவது சீசன் தற்போது 50 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வழக்கமாக பிக்பொஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாகப் போட்டியாளர்கள் கலந்துகொள்வது வழக்கம்.

40 அல்லது 50 நாட்கள் கடந்த பின்னரே வைல்டு கார்டு என்ட்ரியாகப் போட்டியாளர்கள் பிக்பொஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவார்கள்.

தற்போது நடைபெற்று வரும் 5ஆவது சீசனில் முதல் வைல்டு கார்டு போட்டியாளராகப் பிக்பொஸ் வீட்டுக்குள் சில தினங்களுக்கு முன்பு கதிர் என்பவர் சென்றார்.

தற்போது மற்றொரு என்ட்ரியாக பிரபல சின்னத்திரை நடிகரும், நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பருமான சஞ்சீவ், பிக்பொஸ் வீட்டுக்குள் போட்டியாளராக சென்றிருக்கிறார்.

இதற்கான வீடியோ மற்றும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.