இறந்தவர்களை நினைவுகூர எந்த தடையும் இல்லை: கட்டளையை திருத்தி முல்லைத்தீவு நீதிவான் உத்தரவு!

Thursday, 25 November 2021 - 19:11

%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0+%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%3A+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%21+
மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடை விதித்து பிறப்பித்த கட்டளையை திருத்தி, முல்லைத்தீவு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு கடந்த 17ஆம் மற்றும் 23 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட 72 பேருக்கான தடை உத்தரவுகள் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு, முள்ளியவளை ஒட்டுசுட்டான், மாங்குளம், மல்லாவி ஐயன்குளம், புதுக்குடியிருப்பு முதலான ஏழு காவல்துறை நிலையங்களின் கோரிக்கைக்கு அமைய குறித்த தடை உத்தரவுகள் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த தடை உத்தரவுகளை நீக்கக்கோரி நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் ஊடாக விண்ணப்பிக்கப்பட்டு இன்று விசாரணைகள் இடம்பெற்றன.

இதன்போது, இறந்தவர்களுக்கு பொதுவான நினைவுகூரல்களை மேற்கொள்ள முடியும் என்றும், இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவரை நினைவு கூறுவது மானிடப்பண்பு என்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, ஏற்கனவே வழங்கிய மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கும் கட்டளையை, இறந்தவர்களை நினைவுகூருவதற்கு எந்த தடையும் இல்லை என்பதாக திருத்தியமைத்து நீதிவான் கட்டளை பிறப்பித்தாரென எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, மாவீரர் வாரத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மாணவர்களால் போரில் உயிர்நீத்தவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.