காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 'டிங்கர் லசந்த' பலி

Friday, 26 November 2021 - 6:19

+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%27%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%27+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
முக்கிய உலக பாதாளக்குழு உறுப்பினர் 'டிங்கர் லசந்த' என அழைக்கப்படும் ஹேவாலுனுவிலகே லசந்த காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.

இன்று (26) அதிகாலை களுத்துறை - தியகம பகுதியில் காவல்துறையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.  

இதனையடுத்து அவரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீட்பதற்காக காவல்துறையினரால் குறித்த பகுதிக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது, திடீரெனக் காவல்துறையினர் மீது குறித்த நபர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து, காவல்துறையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அத்துடன், சம்பவத்தில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கொல்லப்பட்ட நபர் பாதாள உலகக்குழு உறுப்பினரான சன்ஷைன் சுத்தாவின் கொலை உள்ளிட்ட மேலும் பல படுகொலை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.