சுரேஷ் சலே முன்வைத்த முறைப்பாடு தொடர்பில் சட்ட ஆலோசனை பெற சிஐடி எதிர்பார்ப்பு

Friday, 26 November 2021 - 8:31

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே முன்வைத்த முறைப்பாடு தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைக்கான சட்ட ஆலோசனைகளை பெற எதிர்பார்த்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளது.

அருட்தந்தை சிறில் காமினி உள்ளிட்ட தரப்பினர் சிலர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பான அறிக்கையிடலின்போது இந்த விடயம் அறியப்படுத்தப்பட்டுள்ளது.

விசாரணை நடவடிக்கை இன்னும் நிறைவடையவில்லை எனக் குற்றப்புலனாய்வு திணைக்களம், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றது.

இந்த விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம், இது தொடர்பிலான விரிவான விசாரணைகளை மேற்கொண்டு அதன் முன்னேற்ற அறிக்கையை கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.