10,000 டெஸ்ட் ஓட்டங்களைக் கடப்பதே எனது இலக்கு - திமுத் கருணாரத்ன

Friday, 26 November 2021 - 8:49

10%2C000+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87+%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+-+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9
பத்தாயிரம் டெஸ்ட் ஓட்டங்களை கடப்பதே தனது இலக்கு என்றும், குறைந்தது 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆவலுடன் இருப்பதாகவும் இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

காலி சர்வதேச மைதானத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இப்போட்டியில் இலங்கை அணி 187 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்ததுடன், இதில் முதல் இன்னிங்ஸில் 147 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 83 ஓட்டங்களையும் தலைவர் திமுத் கருணாரத்ன பெற்றிருந்தார்.

இலங்கை கிரிக்கெட் வீரர்களில் குமார் சங்கக்கார (12,400) மற்றும் மஹேல ஜயவர்தன (11,814) மட்டுமே இதுவரை 10,000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்துள்ளனர்.

தற்போது திமுத் கருணாரத்ன மொத்தமாக 5,406 டெஸ்ட் ஓட்டங்களை பெற்றுள்ளார்.

அவர் இந்த வருடத்தில் 854 டெஸ்ட் ஓட்டங்களை எடுத்துள்ளதுடன், அவரது சராசரி 77.63 ஆக காணப்படுகிறது.