கமல்ஹாசனின் உடல் நிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

Friday, 26 November 2021 - 16:47

%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் நடிகர் கமலின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு கடந்த 22ஆம் திகதி கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின்னர் தனக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கமல்ஹாசன் ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்திருந்தார்.

அதன்காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கமல்ஹாசனின் உடல்நிலை குறித்து அவர் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் இன்று  அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கமல்ஹாசன் குணமடைந்து வருவதாகவும், அவரது  உடல்நிலை சீராக உள்ளதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.