அண்மைய தரவுகளின்படி பணவீக்கம் அதிகரிப்பு

Saturday, 27 November 2021 - 12:09

%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
பணவீக்கமானது நிரம்பல் பக்க சமமின்மைகள் மற்றும் பன்னாட்டு ரீதியிலான பண்ட விலைகளில் அதிகரிப்பு போன்ற முக்கிய காரணங்களால் அண்மையில் அதிகரித்திருந்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கூட்டுக்கேள்வி நிலைமைகளின் படிப்படியான உறுதித்தன்மையுடன் கூடிய நிரம்பல் பக்க இடையூறுகள், உள்நாட்டு விலைக் கட்டுப்பாடுகளின் நீக்கம் மற்றும் அதிகரித்துச் செல்லும் உலகளாவிய வலு மற்றும் பண்ட விலைகளைப் பிரதிபலித்து பல்வேறு நிர்வாக ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட விலைகளுக்கான மேல்நோக்கிய சீராக்கங்கள் என்பன அண்மையில் இலக்கிடப்பட்ட மட்டங்களுக்கு மேலாக பணவீக்கத்தினை உந்தச்செய்துள்ளன.

முதன்மைப் பணவீக்கத்தின் மீது மேலுமொரு உயர்வடைதலானது உடனடி எதிர்காலத்தில் சாத்தியமானதொன்றாகக் காணப்படுகின்ற போதிலும் அத்தகைய அசைவுகள் தற்காலிகமானதாகுமென எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.