இன்றைய பிக்பொஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார்?

Saturday, 27 November 2021 - 17:31

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%3F
பிரபல தமிழ் பிக்பொஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகின்றமை யாவரும் அறிந்ததே. இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்து தற்போது 5 ஆவது சீசன் நடைபெற்று வருவதுடன் அதனைக் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்திருந்தார்.

தற்போது நடிகர் கமலுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதனால், அவர் சில வாரங்களுக்குப் பிக்பொஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகி, ஓய்வு எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அடுத்துவரும் பிக்பொஸ் நிகழ்ச்சியைதொகுத்து வழங்குவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து இருந்தது.

இந்நிலையில், இன்றைய பிக்பொஸ் நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவாரென தகவல்கள் பரவி வந்தமை குறிப்பிடத்தக்கது.