சிங்கப்பூர் பிரவேசிக்க இலங்கையர்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி!

Sunday, 28 November 2021 - 10:21

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%21
இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளிலிருந்து வருகைதரும், 2 கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு, தனிமைப்படுத்தலின்றி தமது நாட்டுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவுள்ளதாக சிங்கப்பூர் சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பூரண தடுப்பூசி பெற்ற இலங்கை, தாய்லாந்து, கம்போடியா, பிஜி, மாலைத்தீவு மற்றும் துருக்கி ஆகிய 6 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு, எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தலின்றி சிங்கப்பூருக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தாய்லாந்து பிரஜைகளுக்கு எதிர்வரும் 14ஆம் திகதி முதல் சிங்கப்பூருக்கு பிரவேசிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.