ட்விட்டரில் ட்ரெண்டாகும் 'வலிமை' ஹேஷ்டேக்

Sunday, 28 November 2021 - 12:36

%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%27%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%27+%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D
நடிகர் அஜித்குமார் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படத்தின் டீசர் மற்றும் இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், #ValimaiPongal மற்றும் #ValimaiSecondSingle போன்ற ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.

‘வலிமை’ திரைப்படம் 2022ஆம் ஆண்டு ஜனவரியில் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இதுவரை எந்தத் தமிழ் படமும் பொங்கல் வெளியீட்டை அறிவிக்கவில்லை.

இந்நிலையில் 'வலிமை' படத்தின் இரண்டாவது பாடல் டிசம்பர் 2ஆம் திகதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.