முதல் ஹொலிவூட் படத்திலேயே சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடிக்கும் சமந்தா!

Sunday, 28 November 2021 - 15:46

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%21
நடிகை சமந்தா தனது முதல் ஹொலிவூட் படமான எரேஞ்ச்மெண்ட் ஒஃப் லவ் (Arrangement of love) படத்தில் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.

இதில் அவர் எவரும் எதிர்பாராத மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தா விவாகரத்து பெற்ற பின்னர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகும் இரு நாயகி மையப் படங்களில் நடிப்பதுடன், வலைத்தொடர்கள், இந்தி மற்றும் ஆங்கிலப் படங்களிலும் நடித்து வருகின்றார்.

'எரேஞ்ச்மெண்ட் ஒஃப் லவ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம், இந்திய எழுத்தாளர் டைமெரி என் முராரி எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட உள்ளது. ஒரு துப்பறியும் நிறுவனத்தை நடத்தும், இருபால் உணர்வுகொண்ட பெண்ணாக சமந்தா மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இதுகுறித்து நடிகை சமந்தா தன்னுடைய ட்விட்டரில் "ஒரு புதிய உலகம். அன்பின் ஏற்பாட்டின் ஒரு பகுதியாக இருப்பதில் முற்றிலும் மகிழ்ச்சி அடைகிறேன். என்னை அனுவாகத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி பிலிப்ஜோன். இந்த அற்புதமான பயணத்தைத் தொடங்க காத்திருக்க முடியாது. நன்றி” எனக் கூறியுள்ளார்.

பல வெற்றிகரமான தொலைக்காட்சி தொடர்களை இயக்கிய பிரபல இயக்குநர் பிலிப் ஜோன் இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.
இவர் பஃப்டா விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் பிரபலமான டவுன்டன் அபே (Downton Abbey) தொலைக்காட்சி தொடரை இயக்கியவரும் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.