கேகாலை வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது: கொள்கலனுக்கு சேதமில்லை!

Sunday, 28 November 2021 - 16:32

%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%3A+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%21
கேகாலை, ரொக்ஹில் - கஹட்டபிட்டிய பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இருந்த எரிவாயு அடுப்பொன்று தீப்பற்றி, வெடித்து சிதறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (28) காலை வீட்டின் உரிமையாளர் தேநீர் தயாரிப்பதற்காக அடுப்பில் நீரை கொதிக்க வைத்து விட்டு குளியலறைக்கு சென்றபோது இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்போது, சமையல் எரிவாயு கொள்கலனுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை எனவும் அடுப்பு வெடித்து, அதன் பாகங்கள் சமையலறை முழுவதும் சிதறி காணப்பட்டதாகவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.