'பீஸ்ட் 100' வைரலாகும் புகைப்படம்

Sunday, 28 November 2021 - 20:07

%27%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+100%27+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
'பீஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு 100 நாட்களை எட்டியுள்ள நிலையில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

'பீஸ்ட்' படப்பிடிப்பின்போது தளபதி விஜய், பூஜா ஹெக்டே, ரெட்டின் கிங்ஸ்லி, VTV கணேஷ் உள்ளிட்ட பலர் இருக்கும் புகைப்படத்தையே அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தளபதி விஜய், தற்போது கோலமாவு கோகிலா மற்றும் டொக்டர் ஆகிய திரைப்படங்களின் இயக்குநரான நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 'பீஸ்ட்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'பீஸ்ட்' படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, யோகிபாபு, அபர்ணா தாஸ், VTV கணேஷ் ஆகியோருடன் இணைந்து வில்லனாக இயக்குநர் செல்வராகவன் நடித்து வருகிறார்.

ப்ளாக் கொமடி ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகிவரும் 'பீஸ்ட்' திரைப்படத்திற்கு முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்வதுடன்,அனிருத் இசையமைக்கிறார்.