அரசாங்கத்தின் தீர்மானத்தால் உர மானியத்தை இழக்கும் விவசாயிகள்: JVP குற்றச்சாட்டு

Sunday, 28 November 2021 - 21:50

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D++%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%3A+JVP+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
தனியார் நிறுவனங்கள் ஊடாக இரசாயன உரத்தினை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தினால் விவசாயிகளுக்கு உர மானியங்கள் கிடைக்கப்பெறாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.

அதன் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா சிலாபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் விவசாயிகளுக்கு தேவையான பசளை உரிய வகையில் விநியோகிக்கப்படவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேதன பசளை ஊடாக விவசாய செய்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என அரசாங்கம் கூறிவந்தது.

இறுதியில் மீண்டும் இரசாயன உரத்தினை இறக்குமதி செய்யும் தீர்மானத்திற்கு வந்துள்ளது.

அந்தப் பொறுப்பு தனியார் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகளுக்கான நிவாரணம் கிடைக்கப்பெறாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.