சட்டவிரோதமாக 23 கிலோவுக்கு அதிகமான வெடிபொருள் வைத்திருந்த நபர் கைது!

Monday, 29 November 2021 - 7:55

%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+23+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%21
அனுமதிப்பத்திரமின்றி பொட்டாசியம் நைட்ரேட் வெடிபொருளை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், கட்டான - களுவாரிப்புவ பிரதேசத்தில் வைத்து 54 வயதான இச்சந்தேகநபர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.

இந்நபரிடமிருந்து 23 கிலோவுக்கும் அதிகமான பொட்டாசியம் நைட்ரேட் வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அத்துடன், குறித்த சந்தேகநபரின் வீட்டில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில், கூரிய ஆயுதங்கள், வாள் உள்ளிட்டவையும் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.