ரஷ்ய இராஜதந்திரிகள் 27 பேர் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்

Monday, 29 November 2021 - 10:03

%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+27+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D
கடந்த மாதத்தில் 27 ரஷ்ய இராஜதந்திரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.

யூடியூப் செனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஜனவரி 30 ஆம் திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறியதாக தூதுவர் அனடோலி அன்டோனோவ் கூறினார்.

அமெரிக்க - ரஷ்ய இராஜதந்திர உறவுகள் மோசமடைந்ததால், 2016 ஆம் ஆண்டு முதல், தூதுவர்கள் உட்பட அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.