காவல்துறைமா அதிபர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகிறார்!

Monday, 29 November 2021 - 8:19

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%21
ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், அரச தரப்பு சாட்சியாளராக காவல்துறைமா அதிபர் சந்தன விக்ரமரத்ன இன்று நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார்.

இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் காவல்துறைமா அதிபருக்கு அழைப்பாணை விடுத்திருந்தது.

இந்த வழக்கு நாமல் பலல்லே, ஆதித்ய படபெந்திகே மற்றும் மொஹமட் இசதீன் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் ஆயம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.