தொடர்ச்சியாக பதிவாகும் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள்

Monday, 29 November 2021 - 17:16

%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
ஹங்வெல்ல, தித்தெனிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக குறித்த வீட்டில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாதுக்க - அருக்வத்தை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு குழாய் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹட்டன் மல்லியப்பூ சந்தி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு கசிவு காரணமாக இன்று (29) காலை வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியது.

காலை உணவைச் சமைத்துக் கொண்டிருந்த போது இந்த வெடிப்பு ஏற்பட்டதாக குறித்த உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு கொள்கலன் மற்றும் எரிவாயு அடுப்புக்கான குழாயில் வெடிப்பு ஏற்பட்டதால் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.