ஐக்கிய இராச்சியத்தில் பூஸ்டர் தடுப்பூசி திட்டத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தீர்மானம் இன்று

Monday, 29 November 2021 - 22:00

%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
கொரோனா வைரஸ் தொற்றுக்கான கொவிட் பூஸ்டர் திட்டத்திற்கு ஆதரவினை வழங்குவதா? என்பது குறித்த தீர்மானத்தை ஐக்கிய இராச்சியத்தின் தடுப்பூசி ஆலோசனை குழு இன்று வெளியிடவுள்ளது.

ஐக்கிய இராச்சியத்தில் ஒமிக்ரொன் திரிபு தொற்றுக்குள்ளான 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொற்றினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழமையான தடுப்பூசிகள் வழங்கப்படும் கால அளவை குறைத்து, 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பூஸ்டர் ஊசிகளை நீடிப்பது புத்திசாலித்தனமாக இருக்கும் என தடுப்பூசி ஆலோசனை குழுவின் பிரதி தலைவரும் பேராசிரியருமான அந்தனி ஹண்டன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முகக்கவசம் அணிவது மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பான ஒழுங்கு முறைகள் தொடர்பாக பின்னர் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

இதேவேளை, ஒமிக்ரொன் திரிபு தொடர்பான விஞ்ஞானிகளின் பரிந்துரைக்கமையவே தாம் செயல்படவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்சன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஜி7 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் அவசர கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக பிரித்தானிய சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.