4 நாடுகளுக்கு ஹொங்கொங் பயணத்தடை விதித்தது

Tuesday, 30 November 2021 - 13:40

4+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81
நான்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தடை விதிப்பதற்கு ஹொங்கொங் தீர்மானித்துள்ளது.

ஹொங்கொங்கில் வசிப்பவர்கள் தவிர்ந்த ஏனைய வெளிநாட்டவர்களுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவுஸ்திரேலியா, கனடா, இஸ்ரேல் மற்றும் 6 ஐரோப்பிய நாடுகளுக்கு கடந்த 21 நாட்களில் பிரவேசித்தவர்களுக்கும் தடை விதிப்பதற்கு ஹொங்கொங் திட்டமிடுவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

'ஒமிக்ரொன்' கொரோனா வைரஸ் திரிபு உலகளாவிய ரீதியில் பேராபத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார ஸ்தாபனம் நேற்று(29) எச்சரித்திருந்தது. இதனையடுத்து உலக நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்குகின்றன.

இந்த நிலையில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ஹொங்கொங் அரசாங்கம் அங்கோலா, எத்தியோப்பியா, நைஜீரியா மற்றும் ஷம்பியா ஆகிய நாடுகளின் பயணிகளுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.

ஹொங்கொங்கில் வசிப்பவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் முழுமையான தடுப்பூசியைப் பெற்றிருத்தல் அவசியமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஹொங்கில் வசிப்பவர்கள் மீள திரும்பும் போது ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.