24 மணித்தியாலங்களில் எரிவாயுவுடன் தொடர்புடைய 20 தீப்பரவல் சம்பவங்கள் பதிவு

Tuesday, 30 November 2021 - 20:06

+24+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF+20+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயுவுடன் தொடர்புடைய 20 தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது போன்ற சம்பவங்கள் மாத்தறை - நாவிமன, மீகொட, அத்துருகிரிய, மீரிகம, அம்பலாங்கொட, கடவத்தை, தியத்தலாவ, கொள்ளுப்பிட்டி, களுத்துறை, கெக்கிராவ, பத்தனை உள்ளிட்ட பல பிரதேசங்களில் இருந்து பதிவாகியுள்ளன.

இதனையடுத்து, சமையல் எரிவாயுவுடன் தொடர்புடைய தீப்பரவல்கள் அல்லது வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கும் அதுகுறித்த தீர்வினை வழங்குவதற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.