கனடாவில் ஒமிக்ரொன் தொற்றாளர்கள் 6 பேர் அடையாளம்!

Wednesday, 01 December 2021 - 10:23

%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+6+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%21
ஒமிக்ரொன் வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்கா தவிர்ந்த ஏனைய நாடுகளில் இருந்து விமானம்மூலம் தமது நாட்டுக்கு வரும் பயணிகள் கொவிட் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது.

கனேடிய சுகாதார அமைச்சர் நேற்று(30) இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

புதிய ஒமிக்ரொன் கொவிட் திரிபுடன் கனடாவில் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்கா தவிர்ந்த ஏனைய நாடுகளில் இருந்து விமானம்மூலம் தமது நாட்டுக்கு வரும் பயணிகள் விமான நிலையத்தில் வைத்து கொவிட் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தங்களுக்கான பரிசோதனை பெறுபேறுகள் வரும் வரையில் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.