சமையலறை CCTV கெமராவில் பதிவான எரிவாயு தொடர்பான வெடிப்பு சம்பவம் (காணொளி)

Wednesday, 01 December 2021 - 11:19

%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88+CCTV+%E0%AE%95%E0%AF%86%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29

நேற்றும் நேற்று முன்தினமும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் எரிவாயு தொடர்பான தீ மற்றும் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நேற்றைய தினம் மாத்திரம் இவ்வாறான 16 சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், நேற்றைய தினமாகும்போது, எரிவாயு தொடர்பான விபத்துக்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

அதிகரித்து வரும் எரிவாயு தொடர்பான பாதுகாப்பின்மை குறித்து அரசாங்கமோ அல்லது சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவனங்களோ இதுவரையில் தெளிவான பதிலை அளிக்கவில்லை.

இதேவேளை, இந்தப் பிரச்சினைக்கு விடை காண எமது செய்திப்பிரிவு நேற்று முத்துராஜவெல லிட்ரோ கேஸ் நிறுவனத்துக்கு சென்றிருந்தது.

அங்கு எமது செய்திப்பிரிவுக்கு கருத்து தெரிவித்த எரிவாயு களஞ்சியத்தின் முகாமையாளர்,  ஜூலை மாதத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட எரிவாயு கலவையில் சில மாற்றங்களைச் செய்திருந்தோம் என்றார்.

மாற்றியமைக்கப்பட்ட எரிவாயு கொள்கலன் மாதிரிகள் நுகர்வோருக்கு விநியோகிக்கப்பட்டதாகக் கூறினார்.

எவ்வாறாயினும், கலவையின் செறிமானம் குறித்து எமது செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் உரிய பதில் வழங்கியிருக்கவில்லை. இந்தக் கேள்விக்குத் தன்னால் பதிலளிக்க முடியாது என்றார்.

இதற்கிடையில், சமையலறையில் எரிவாயு அடுப்புக்கு அருகே  ஏற்படும் சிறிய வெடிப்புச் சம்பவம், சமையலறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

ராகம பிரதேசத்தில் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் இந்தக் காணொளி பதிவான வீட்டைக் கண்டுபிடிக்க எமது செய்தி பிரிவினர் முயற்சித்த போதிலும் அது பலனளிக்கவில்லை.