வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சுப்பிரமணியம் சிவபாலன் சடலமாக மீட்பு

Wednesday, 01 December 2021 - 13:18

%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதேச சபை உறுப்பினரான சுப்பிரமணியம் சிவபாலன், சாவகச்சேரி தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று(01) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாததை அவதானித்த அயலவர்கள் அது தொடர்பில் காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பிரவேசித்த காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.