பிரியந்தவை காப்பாற்ற போராடிய பாகிஸ்தானியருக்கு பாராட்டு சான்றிதழ்!

Tuesday, 07 December 2021 - 18:25

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%21
பாகிஸ்தான், சியல்கொட்டில் இலங்கையரான பிரியந்த குமாரவை அடிப்படைவாதிகளிடமிருந்து பாதுகாக்க முயன்ற பாகிஸ்தானியரான மாலிக் அத்னனுக்கு பிரதமர் இம்ரான் கானினால் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அடிப்படைவாதிகளினால் பிரியந்த குமார தாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரை காப்பாற்றுவதற்கு மாலிக் அத்னன் தனிநபராக போராடியிருந்தார்.

அவரது மனிதாபிமான செயலானது முழு பாகிஸ்தானுக்கும் கௌரவத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

அதற்கமைய, குறித்த நபரின் மனிதாபிமான செயலை பாராட்டி 'தம்ஹா ஐ சுஜாத்' என்ற அதியுயர் விருதினையும் வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், பிரியந்த குமாரவுக்கு அனுதாபம் செலுத்தும் நிகழ்வொன்று இன்று இஸ்லாமாபாத்தில் இடம்பெற்றபோது, மாலிக் அத்னனுக்கு பாராட்டு சான்றிதழ் பிரதமர் இன்ரான் கானினால் வழங்கப்பட்டது.