கடந்த ஆண்டு மலேரியாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Tuesday, 07 December 2021 - 22:44

%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
கொரோனா வைரஸ் காரணமாக சுகாதாரத்துறை பாதிக்கப்பட்டதால், கடந்த ஆண்டு உலகளவில் மலேரியாவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 69 ஆயிரத்தால் உயர்வடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் மலேரியாவினால் சர்வதேச ரீதியில் 558,000 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், கடந்த ஆண்டில் 627,000 பேர் மலேரியாவினால் மரணித்தனர்.

பெரும்பாலான குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, மலேரியா நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சைகளில் ஏற்பட்ட தடங்கல்கள் காரணமாக அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.