பிரபல பாடகர் சோனு நிகமுக்கு கொவிட்!

Wednesday, 05 January 2022 - 8:25

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%21
பிரபல பின்னணி பாடகரான சோனு நிகம் உட்பட அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

பொலிவூட்டின் பிரபல பின்னணி பாடகரான சோனு நிகம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, மராத்தி உட்பட பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார்.

சிறந்த பின்னணிப் பாடகருக்கான பல விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தனது மனைவி மற்றும் மகன் ஆகியோருக்கும் கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“நான் டுபாயில் இருக்கின்றேன். புவனேஸ்வரில் நிகழ்ச்சி நடத்தவும், சூப்பர் சிங்கர் சீசன் 3 படப்பிடிப்பிற்காகவும் நான் இந்தியாவுக்கு வர வேண்டியிருந்தது. இந்நிலையில் நான் கொவிட் பரிசோதனை செய்த போது எனக்கு கொவிட் தொற்றிருப்பது உறுதியானது. கொவிட் தொற்று உறுதியானாலும் நான் இறக்கவில்லை. என் தொண்டையும் நன்றாக இருக்கிறது. என்னால் இழப்பை சந்தித்தவர்களுக்காக நான் வருத்தப்படுகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.