இவ்வருடத்தின் முதல் வாரத்தில் 16,000 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு

Monday, 10 January 2022 - 14:10

%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+16%2C000+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
இந்த வருடத்தின் முதல் வாரக் காலப்பகுதியில் மாத்திரம் 16,000 சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம் சுற்றுலாப்பயணிகளின் சுகாதார பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துவதற்கு, புதிய தடுப்பூசி மையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 24 மணிநேர தடுப்பூசி மையமும் இயங்கி வரும் நிலையில் பயணிகள் தங்களுக்கான தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள முடியும்.

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும், மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இதன்மூலம் மேலும் சுற்றுலாப்பயணிகளின் வருகையினை எதிரப்பார்க்க முடியும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.