ஜப்பானையும் தாக்கிய சுனாமி

Sunday, 16 January 2022 - 13:37

%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF
டொங்காவின் ஆழ்கடலில் பதிவான எரிமலை வெடிப்பினை அடுத்து ஏற்பட்ட ஆழிப்பேரலை ஜப்பானிய கரையோரத்தைத் தாக்கியுள்ளதாக ஜப்பானிய வளிமண்டல நிலையம் அறிவித்துள்ளது.

தென் அமாமி மற்றும் டொக்காரா தீவுகளை அண்டிய பிரதேசங்களில் 3 மீட்டர் வரை கடல் அலைகள் உயர்ந்ததனை அடுத்து சுனாமி எச்சரிக்கை நேற்று விடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹொக்கைடோவில் இருந்து ஒக்கினாவோ வரையிலான கரையோர பகுதிகளில் கடல் மட்டம் 1 மீட்டருக்கு உயர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கரையோர வாழ் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

ஆழ்கடல் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் 5.8 மெக்னிட்யூட் அளவில் பதிவானதாக அமெரிக்க புவிசரிதவியல் மையம் தெரிவித்துள்ளது.

இதன் தாக்கம் பல நாடுகளில் உணரப்பட்டதாக விஞ்ஞானிகளினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டொங்கோவில் இருந்து 2 ஆயிரத்து 300 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நியூசிலாந்தின் வட கரையோரப்பகுதிகளிலும் இதன் தாக்கம் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரையோரப்பகுதியை விட்டு பலர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பிரபல கரையோர சுற்றுலாத்தலத்திலிருந்து சில மணி நேரத்திற்கு மக்கள் நகர்த்தப்பட்டனர்.

பீஜியில் ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் அபாயகரமான கடல் அலைகள் ஏற்படுவதனால் பிரதேச மக்களை கரையோரத்திற்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

எரிமலை வெடிப்பு இடம்பெற்ற இடத்திலிருந்து பீஜி 800 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திலிருந்த போதிலும் அதன் சத்தம் பாரிய அளவில் உணரப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று கடல் அலையின் சீற்றம் குறைந்துள்ள போதிலும் மக்கள் அவதானமாக இருக்கும்படி பசுபிக் ஆழிப்பேரலை எச்சரிக்கை மையம் அறிவுறுத்தியுள்ளது.

சற்று முன்னர் நியூசிலாந்தின் பிரதமர் ஜசிண்டா ஆடன் தெரிவித்த தகவலின் படி கரையோரத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த பல படகுகளும் சில சிறிய ரக கப்பல்களும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சேத விபரங்களைத் துல்லியமாக அறியும் நோக்கில் நாளை உலங்குவானூர்திகள் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்லும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.