அமெரிக்காவில் 4 பேரை பணயக் கைதிகளாக வைத்திருந்த மர்ம நபர் உயிரிழப்பு

Sunday, 16 January 2022 - 14:51

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+4+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கோலிவில்லே பகுதியில் உள்ள ஆலயத்துக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த மர்ம நபர், அங்கிருந்த 4 பேரை பணயக் கைதிகளாக பிடித்தார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளதுடன், அப்பகுதியில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பணயக் கைதிகளை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானியான ஆபியா சித்திக்கை விடுவிக்க வேண்டும் என அந்நபர் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க அதிகாரிகளை கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் குறித்த பெண்ணுக்கு 86 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நியூயோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், 4 பணயக் கைதிகளை வைத்து, ஆபியா சித்திக்கை விடுவிக்குமாறு குறித்த மர்ம நபர் மிரட்டல் விடுத்திருந்தார்.

8 மணி நேரத்துக்கு பின்னர் பணயக் கைதிகளில் ஒருவர் விடுவிக்கப்பட்டதுடன், அவருக்கு காயம் எதுவும் இல்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதன் பின்னர் ஏனைய 3 பணயக் கைதிகளும் காயங்கள் எதுவுமின்றி விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 4 பேரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த மர்ம நபர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.