மேற்குலக நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராகும் தலிபான்கள்!

Monday, 24 January 2022 - 9:30

%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21
ஆப்கானிஸ்தானின் தலிபான் நிர்வாகம் முதன் முறையாக மேற்குலக நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராகியுள்ளது.

இதன் முதற்கட்டமாக தலிபான்கள் நோர்வேயுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 தினங்களாக நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்த்தையில், ஆப்கானிஸ்தானில் இடம்பெறும் மனித உரிமை மீறல் செயற்பாடுகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

எவ்வாறாயினும், தலிபான்களுடனான குறித்த கலந்துரையாடலுக்கு இடமளிக்க வேண்டாம் என தெரிவித்து ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.