கொவிட் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை பிரிவுகளில் போதிய இடம் உள்ளது

Thursday, 27 January 2022 - 13:07

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81
தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் கொரோனா நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 70 கட்டில்களில் 63 கட்டில்கள் மாத்திரமே நிரம்பியுள்ளதாகச் சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சையளிப்பதற்கான இடவசதி இல்லை எனப் பரப்பப்படும் தகவல் உண்மைக்குப் புறம்பானது.

அத்துடன் வைத்தியசாலையில் பிராணவாயுவின் தேவை தற்போதைய அளவை விட அதிகரிக்கவில்லை எனவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் வைத்தியசாலைகளில் கொவிட்-19 பரிசோதனை கருவிகளுக்கான பற்றாக்குறை நிலவுவதாகச் சுகாதார தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, ஒமைக்ரொன் வைரஸ் திரிபு தோலில் 21 மணி நேரத்துக்கு அதிகமாக உயிர்ப்புடன் இருக்கும் எனவும் பிளாஸ்டிக் பரப்புகளில் 8 நாட்களுக்கு மேல் உயிர்ப்புடன் இருக்கும் எனவும் தெரியவந்துள்ளது.

ஒமைக்ரொன் வைரஸ் திரிபு தொடர்பில் ஜப்பானில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகம் ஒன்று அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.