தளபதி 66 படம் தொடர்பில் படக்குழுவினர் வெளியிட்ட தகவல்

Sunday, 19 June 2022 - 17:06

%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+66+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து, தோழா பட இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்து வருகிறார்.

தளபதி 66 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.

இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.

இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இவர்களுடன் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தளபதி 66 படத்தின் முதல்பார்வை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி இப்படத்தின் முதல்பார்வையை நாளை மறுதினம் மாலை 6.01 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.


No description available.