தமிழ் சினிமாவில் புதிய சாதனை படைத்த 'விக்ரம்'

Monday, 20 June 2022 - 11:34

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%27%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%27
தமிழ் சினிமாவில் கமல் ஹாசனின் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் புதிய சாதனையை படைத்துள்ளது.

தமிழ் சினிமா பொக்ஸ் ஓபிஸில் முதல் இடத்தில் இருந்த பாகுபலி - 2 படத்தின் வசூல் சாதனையை முறியடித்து விக்ரம் முன்னேறியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வெளியான இப்படத்தில் கமல்ஹாசன், ஃபகத் பாசில், விஜய் சேதுபதி என பலர் நடித்துள்ளனர்.

தமிழக பொக்ஸ் ஓபிஸில் ஏனைய மொழி படங்களும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

தமிழகத்தில் அதிகம் வசூலித்த படங்களில் பாகுபலி - 2 படம் முதல் இடத்தில் இருந்து வந்தது.

தற்போது 5 வருடங்களுக்கு பிறகு அந்த வசூல் சாதனையை முறியடித்து கமல்ஹாசனின் விக்ரம் சாதனை படைத்துள்ளது.

இதுவரை தமிழகத்தில் மாத்திரம் ரூபா 155 கோடி வரை வசூலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.