எம்பிலிப்பிட்டிய கடதாசி ஆலையை மீள இயங்கச் செய்ய நடவடிக்கை

Tuesday, 21 June 2022 - 8:56

%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
2012ஆம் ஆண்டு முதல் செயலிழந்துள்ள எம்பிலிப்பிட்டிய கடதாசி ஆலையினை மீள இயங்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கு அமைய முதலீட்டு நிறுவனம் ஒன்றுடன் அண்மையில் இலங்கை முதலீட்டு சபை ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது.

இந்த திட்டத்தின் முதலாவது கட்டத்தின் போது ஒரு கோடியே 60 லட்சம் அமெரிக்க டொலர் நிதி முதலீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1978 ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்ட இந்த கடதாசி ஆலையின் உற்பத்தி நடவடிக்கைகள் 2003 ஆம் ஆண்டு முற்றாக இடைநிறுத்தப்பட்டன.

மீண்டும் இந்த ஆலை 2011 ஆம் ஆண்டில் செயற்பட ஆரம்பித்த போதிலும், குறுகிய காலத்தின் பின்னர் மீண்டும் அதன் உற்பத்தி நடவடிக்கைகள் தடைப்பட்டன.

இந்தநிலையில், எம்பிலிபிட்டிய கடதாசி ஆலையை புனரமைத்து முழு அளவில் உற்பத்தியினை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை முதலீட்டு சபை தெரிவித்துள்ளது.