இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு கொவிட்-19 உறுதி

Tuesday, 21 June 2022 - 13:00

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்தநிலையில் அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒத்திவைக்கப்பட்ட 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக பிரித்தானியாவுக்கு பயணித்துள்ளது.

இந்த போட்டி எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்தநிலையில் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய குழாமில் ரவிசந்திரன் அஸ்வின் பங்கேற்கவில்லை.