விஜயகாந்தின் வலதுகால் விரல்கள் அகற்றப்பட்டன

Tuesday, 21 June 2022 - 16:23

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் வலது காலில் 3 விரல்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கிய விஜயகாந்த், கடந்த 2015 ஆம் ஆண்டுடன் திரையுலகில் இருந்து விலகியிருந்தார்.

அரசியலில் களமிறங்கி, தமிழக அரசியலில் தே.மு.திகவை 3ஆவது பெரிய கட்சியாக வளர்த்தெடுத்தார்.

பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக  கட்சிப் பணிகளில் இருந்து விலக ஆரம்பித்தார்.

அவர், அண்மையில் வெளியான ஒரு புகைப்படத்தில் மெலிந்த உடல் தோற்றத்துடன், காணப்பட்டது அவரது இரசிகர்களையும், தொண்டர்களையும் கவலையடையச் செய்தது.

இந்நிலையில் அறுவை சிகிச்சையின் மூலம் அவரது வலது காலில் 3 விரல்கள் அகற்றப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.