விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் முதல் பார்வை வெளியானது!

Tuesday, 21 June 2022 - 18:53

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%27%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%27+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%21
பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து, விஜய் தற்போது தனது 66 ஆவது படத்தில் நடித்து வருகிறார்.

வம்சி இயக்கும் இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். தமன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார் என சிரேஷ்ட நடிகர்கள் பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்தது.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தளபதி 66 படத்தின் முதல் பார்வை வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

நாளை விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில் தற்போது படத்தின் பெயர் வெளியாகியுள்ளது.

இப்படத்துக்கு "வாரிசு" எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், இன்று அதன் முதல்பார்வை வெளியானது.

அடுத்த வருடம் தைப்பொங்கலுக்கு படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள வாரிசு முதுல் பார்வை தற்போது இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது.

Image