30 ஆண்டுகளில் பிரித்தானியாவில் மிகப்பெரிய தொடருந்து துறை புறக்கணிப்பு

Tuesday, 21 June 2022 - 19:26

30+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF++%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
பிரித்தானியாவில், கடந்த 30 ஆண்டுகளில் மிகப்பெரிய தொடருந்து துறை பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வேதனப் பிரச்சினை, ஆட்குறைப்பு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்லாயிரக்கணக்கான தொடருந்து ஊழியர்கள் இந்தப் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, முழுமையான தொடருந்து வலைப்பின்னலும் பாதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய தொடருந்து ஊழியர்களின் தொழிற்சங்கத்தினருக்கும் தொடருந்துதுறை நிர்வாகத்தினருக்கும் இடையில் கடந்த நாட்களில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காததை அடுத்து, தொழிற்சங்கத்தினர் இந்தத் தீரமானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடருந்து துறை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பினால், பல தொடருந்து பயணங்கள் இரத்தாகியுள்ளமையால், மில்லியன்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் சுரங்க வழி தொடருந்து சேவைகளும் தொழிற்சங்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.