இலங்கை மற்றும் சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணியை இலங்கை வீழ்த்தியது.
259 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய அவுஸ்திரேலிய அணி 254 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இலங்கை அணி அவுஸ்திரேலிய அணியை தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோற்கடிப்பது இதுவே முதல் தடவையாகும்.
முன்னதாக, 30 வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது இலங்கை அணி தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தியிருந்தது.
1992 இல், இலங்கை 2 -1 என்ற அடிப்படையில் தொடரை வென்றது.
இந்த நிலையில், இன்றைய போட்டியில் அஸ்திரேலியாவுக்காக சிறப்பாக துடுப்பாடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர், தனது 19 ஆவது ஒருநாள் சதத்தை ஒரு ஓட்டத்தினால் தவறவிட்டு ஆட்டமிழந்தார்.
இந்த 99 ஓட்டங்களில் டேவிட் வோர்னர் 12 பவுண்டரிகளை பெற்றிருந்தார்.
259 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய அவுஸ்திரேலியா 4 ஓட்டங்களில் தொடரை நழுவவிட்டது.
தொடர்ந்து ஏழாவது முறையாக நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணித்தலைவர் முதலில் துடுப்பாட இலங்கையை அழைத்தார்.
முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 258 ஓட்டங்களை எடுத்தது.
தனஞ்சய டி சில்வா மற்றும் சரித் அசலங்க ஆகிய இருவரும் நான்காவது விக்கெட்டுக்காக இணைந்து 22 ஓவர்களில் 101 ஓட்டங்களை சேர்த்தனர்.
தனஞ்சய டி சில்வா 60 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சரித் அசலங்க தனது முதல் ஒருநாள் சதத்தை பதிவு செய்தார்.
99 பந்துகளில் அவர் சதம் அடித்தார். 47 ஆவது ஓவரின் நான்காவது பந்தில் சரித் அசலங்க 110 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பந்துவீச்சில் மட்சல் மார்ஷ், பெட் கம்மின்ஸ் மற்றும் மெத்தியூ குஹென்மன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.
போட்டியின் வீரராக சரித் அசலங்க தெரிவானார்.