நாணயப் பரிவர்த்தனைகள் கண்காணிப்புக்கான புதிய முறைமை அறிமுகம்

Wednesday, 22 June 2022 - 9:18

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
விரிவான எல்லை தாண்டிய பரிவர்த்தனைகள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனைகள் கண்காணிப்பு முறைமையை செயற்படுத்த புதிய தரவு சேகரிப்பு முறையை இலங்கை மத்திய வங்கி நடைமுறைப்படுத்தியுள்ளது.

உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகளின் பங்கேற்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

புள்ளிவிபரவியல் மற்றும் ஒழுங்குமுறை நோக்கங்களுக்காக மதிப்புமிக்க உள்ளீடுகளை வழங்குவதன் மூலம் பல அம்சங்களில் கொள்கை உருவாக்கத்திற்கு இது உதவும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.