8 வருடமாக கைவிடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான கலந்துரையாடல் மீள ஆரம்பம்

Wednesday, 22 June 2022 - 13:44

8+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
8 வருட காலமாக கைவிடப்பட்டுள்ள இந்திய மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையேயான உத்தேச சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பிலான கலந்துரையாடல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 27ஆம் திகதி முதல் அடுத்த மாதம் முதலாம் திகதி வரை இந்த கலந்துரையாடல் புதுடில்லியில் இடம்பெறவுள்ளதாக இந்திய கைத்தொழில் அமைச்சர் பியுஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்திய ஆடைகள், துணிகள், விளையாட்டு உபகரணங்கள் என்பவற்றிற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அதிகரித்த கேள்வி நிலவுகிறது.

இவ்வாறான பின்னணியில் குறித்த வர்த்தக ஒப்பந்ததத்தை மேற்கொள்வதன் மூலம் இந்தியாவிற்கு பொருளாதார நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும் என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.