இலங்கை அணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கட் அணி அடுத்த மாதம் 6 ஆம் திகதி இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இதன்படி, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் குழாமில், மொஹமட் ரிஷ்வான் (உப தலைவர் - விக்கெட் காப்பாளர்), அப்துல்லா ஹாபிக், அசார் அலி, பஹிம் அஸ்ரப், பவாட் ஆலம், ஹரிஸ் ரவுப், ஹசன் அலி, இமாம் உல் ஹக், மொஹமட் நவாஸ், நஸீம் ஷா, நவுமான் ஹலி, சல்மான் அலி அஹா, ஷர்ப்ராஸ் அஹமட், சவுட் சாஹீல், சஹீன் ஷா அப்ரிடி, சான் மசூட், யசீர் ஷா ஆகியோர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 16 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.